மெக்சிகோ நாட்டில் ஒரே நாளில் கொரனோ வைரஸ் தாக்கி 770 பேர் உயிரிழப்பு

மெக்சிகோ நாட்டில் நேற்று ஒரே நாளில் கொரனோ வைரஸ் தாக்கி 770 பேர் உயிரிழந்தனர்.
மெக்சிகோ நாட்டில் ஒரே நாளில் கொரனோ வைரஸ் தாக்கி 770 பேர் உயிரிழப்பு
Published on

* ஐ.நா.வுக்கான துருக்கி நாட்டின் தூதர் வோல்கன் போஸ்கிர் ஐ.நா. பொதுச்சபையின் 75வது அமர்வுக்கான தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* மெக்சிகோ நாட்டில் நேற்று ஒரே நாளில் கொரனோ வைரஸ் தாக்கி 770 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் அந்த நாட்டில் கருணாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 19 ஆயிரத்து 80 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் அங்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 793 ஆக உயர்ந்துள்ளது.

* கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் வட கொரியாவிடம் இருந்து சந்தேகத்திற்கிடமான எந்த நடவடிக்கையும் தென்படவில்லை தென் கொரியா தெரிவித்துள்ளது.

* அமெரிக்காவின் விண்வெளி நடவடிக்கைகளுக்கு சீனா மற்றும் ரஷியா ஆகிய இரு நாடுகளும் உடனடி மற்றும் கடுமையான சிறுத்தைகளை வழங்கி வருவதாக அமெரிக்க ராணுவ தலைமை பென்டகன் குற்றம் சாட்டியுள்ளது.

* கஜகஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர் நூர்சுல்தான் நாசர்பயேவுக்கு கொரோனா வைரஸ் தொற்றிக் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

* சீனாவின் குவாங்சி ஜுவாங் மாகாணத்தில் உள்ள பாங்செங்காங் நகரில் புதிதாக கட்டப்பட்டு வந்த வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

* ஆப்கானிஸ்தானின் பக்லான் மாகாணத்தில் தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீஸ் அதிகாரிகள் 7 பேர் கொல்லப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com