ஆஸ்திரியாவில் பள்ளிக்குள் புகுந்து துப்பாக்கி சூடு: 8 பேர் பலி

பலியானோர் விவரங்கள் பற்றிய தகவல் வெளியாகவில்லை.
வியன்னா,
ஆஸ்திரியா நாட்டின் கிராஸ் நகரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் இன்று மர்ம நபர் ஒருவர் புகுந்து சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இந்தச் சம்பவத்தில் குறைந்தது எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தன்ர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அதன்பின் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, அந்நாட்டு உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில்;
"துப்பாக்கி சூடு குறித்து தகவல் அறிந்தவுடன் காலை 10 மணிக்கு (உள்ளூர் நேரம்) சிறப்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். பள்ளியிலிருந்து மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்" என தெரிவித்தனர். பலியானோர் விவரங்கள் பற்றிய தகவல் வெளியாகவில்லை. 300,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் கிராஸ் நகரம், ஆஸ்திரியாவின் இரண்டாவது பெரிய நகரம் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story