ஏமனில் சாலை விபத்து; 8 பேர் பலி

ஏமன் நாட்டில் பயணிகள் பேருந்து மற்றும் லாரி மோதி கொண்டதில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
ஏமனில் சாலை விபத்து; 8 பேர் பலி
Published on

ஏடன்,

ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அந்நாட்டு அரசும், அரசு ஆதரவு படைகளும் நீண்ட போரில் ஈடுபட்டு வருகின்றன.

இதுபோன்று பல வருடங்கள் நீடித்து வரும் ராணுவ நடவடிக்கைகள் மற்றும் பராமரிப்பு குறைவால் ஏமனின் முக்கிய சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் மோசமடைந்து உள்ளன. இதனால் அங்கு அடிக்கடி பயங்கர விபத்துகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், ஏமன் நாட்டின் அல் பேடா பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்றும், லாரி ஒன்றும் மோதி விபத்திற்குள்ளானதில் 8 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். பலர் படுகாயமடைந்து உள்ளனர். அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com