

வாஷிங்டன்,
அமெரிக்காவில் அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந் தேதி இடைக்காலத் தேர்தல் நடைபெற உள்ளது. 2024-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப்புக்கு வாக்களித்த தெற்காசிய அமெரிக்கர்களில் 25 சதவீதம் பேர், இம்முறை ஜனநாயக கட்சி வேட்பாளர்களை ஆதரிக்க உள்ளதாக புதிய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
'இந்தியன் அமெரிக்கன் இம்பாக்ட்' என்ற அமைப்பு 800 தெற்காசிய வாக்காளர்களிடம் இந்த ஆய்வை நடத்தியது. இதில் 87 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினர் ஆவர். மற்ற 13 சதவீதம் பேர் பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நேபாளம், பூடான், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள். டிரம்ப்பை ஆதரித்தவர்களில் 67 சதவீதம் பேர் குடியரசு கட்சி யையே ஆதரித்தாலும், கால்வாசி பேர் ஜனநாயக கட்சிக்கு மாற விருப்பம் தெரிவித்துள்ளனர்.
கமலா ஹாரிசுக்கு வாக்களித்தவர்களில் 96 சதவீதம் பேர் தொடர்ந்து ஜனநாயக கட்சிக்கே வாக்களிக்க உள்ளனர். டெக்சாஸ், மிச்சிகன் போன்ற இழுபறி மாகாணங்களில் இந்தியர்களின் வாக்குகள் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கும் என அந்த அமைப்பு கூறியுள்ளது.