பாகிஸ்தானில் மழை தொடர்பான சம்பவங்களில் 9 பேர் பலி

கைபர் பக்துன்குவா மாகாணத்தின் பன்னு என்ற நகரில் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
பாகிஸ்தானில் மழை தொடர்பான சம்பவங்களில் 9 பேர் பலி
Published on

கராச்சி

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்குவா மாகாணம் மற்றும் பஞ்சாப் மாகாணம் ஆகியவற்றில் கனமழை பெய்தது. அப்போது பலத்த காற்றும் வீசியது. இந்த சம்பவத்தில் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் பன்னு என்ற நகரில் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில் சிக்கி 6 பேர் பலியானார்கள். 30 பேர் காயமடைந்தனர்.

அவர்களில் பலர் கவலைக்குரிய வகையில் உள்ளனர். இதனால், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில், ஒரு சிலர் திருமண விருந்துக்கு வந்த இடத்தில் மழை பெய்ததும், நனைந்து விடாமல் இருக்க மசூதியில் ஒதுங்கி இருந்தனர். அப்போது கட்டிடம் இடிந்ததில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளனர்.

சம்பவம் பற்றி அறிந்து மீட்பு குழுவினர் அந்த இடத்திற்கு சென்று, இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். இதேபோன்று வரிஷ்மி கலா மந்தன் பகுதியில் பழைய வீடு ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், வீட்டில் குடியிருந்த 3 குழந்தைகள் பலியானார்கள். 2 பேர் காயமடைந்தனர்.

இதேபோன்று பஞ்சாப் மாகாணத்தில் பதாமி பாக் பகுதியில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசியதில், வீட்டின் மேற்கூரை இடிந்ததில் 2 பேர் பலியானார்கள். 2 பேர் காயமடைந்தனர். மற்றொரு சம்பவத்தில், மழை நீரில் சிக்கி மோட்டார் சைக்கிளில் இருந்து, சாலையில் தவறி விழுந்து 70 வயது முதியவர் ஒருவர் பலியானார். இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com