அமெரிக்கா: பல்கலைக்கழகம் அருகே துப்பாக்கி சூடு - 9 பேர் படுகாயம்

சைக்கிள் போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
அமெரிக்கா:  பல்கலைக்கழகம் அருகே துப்பாக்கி சூடு - 9 பேர் படுகாயம்
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவின் இண்டியானா மாகாணம் புளுமிங்டன் நகரில் இண்டியானா பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகம் அருகே இன்று அதிகாலை சைக்கிள் போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

சைக்கிள் போட்டியில் பங்கேற்க ஏராளமானோர் பல்கலைக்கழகம் முன் திரண்டிருந்தனர். அப்போது அங்கு திரண்டிருந்தவர்களை குறிவைத்து திடீரென துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கி சூட்டால் அதிர்ச்சியடைந்தவர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.

ஆனாலும், இந்த துப்பாக்கி சூட்டில் 9 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும், துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றது யார்?, துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com