

* இங்கிலாந்தில் அடுத்த மாதம் 19-ந் தேதி நடக்க உள்ள இளவரசர் ஹாரி-மேகன் திருமண விழாவுக்கு, இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல சமையல் கலை வல்லுனர் ரோஸி கிண்டேயுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.
* மேற்கு ஆப்கானிஸ்தானில் நேற்று முன்தினம் இரவு சோதனைசாவடி ஒன்றை குறி வைத்து தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 9 போலீசார் உயிரிழந்தனர். ஹெராத் மாகாணத்தில் நடந்த மற்றொரு தாக்குதலில் 2 போலீசார் பலியாகினர்.
* இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டு உள்ளார். அவர் அந்த நாட்டின் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் யாங் ஜீச்சியை ஷாங்காய் நகரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்.
* சீனா உடனான வர்த்தக உறவு குறித்த பேச்சுவார்த்தை மிக நன்றாக சென்று கொண்டு இருக்கிறது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறி உள்ளார்.
* ரசாயன ஆயுத தாக்குதல் நடந்து உள்ள சிரியாவில், நிலைமை கட்டுமீறி சென்று விடாதபடிக்கு பார்த்துக்கொள்ளுமாறு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளை, ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் கேட்டுக்கொண்டு உள்ளார்.