அமெரிக்காவில் ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 9 ராணுவ வீரர்கள் பலி

அமெரிக்காவில் ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 9 ராணுவ வீரர்கள் பலியாகினர்.
அமெரிக்காவில் ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 9 ராணுவ வீரர்கள் பலி
Published on

கென்டக்கி,

அமெரிக்காவில் கென்டக்கியில் ராணுவ பயிற்சியின் போது இரண்டு அமெரிக்க இராணுவ பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானதில் ஒன்பது வீரர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு 10 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. உள்ளூர் நேரம் (இரவு 11 மணி ), போர்ட் கேம்ப்பெல்லுக்கு மேற்கே உள்ள டிரிக் கவுண்டியில், இராணுவத் தளம் இன்று அதிகாலை வெளியிட்ட ஒரு அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. இதன்படிஉ இரண்டு பிளாக் ஹாக் (HH-60 Black Hawk) மருத்துவ வெளியேற்ற விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பலியான ஒன்பது வீரர்களின் அடையாளங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை . 

இதுதொடர்பாக பிரிக் 101வது வான்வழிப் பிரிவைச் சேர்ந்த ஜெனரல் ஜான் லூபாஸ் கூறுகையில், ஒரு ஹெலிகாப்டரில் ஐந்து பேரும், மற்றொன்றில் நான்கு பேரும் இருந்தனர். இந்த சம்பவம் மிகவும் துரதிஷ்ட வசமானது. இரண்டு ஹெலிகாப்டர்களும் இரவு பார்வை கண்ணாடிகளைப் பயன்படுத்தி பறந்தன. அலபாமாவிலிருந்து ஒரு விமானப் பாதுகாப்புக் குழு இராணுவம் வர உள்ளது.  அவர்கள் வந்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணையைத் தொடங்குவார்கள் என்று அவர் கூறினார்.

விபத்துக்கான காரணம் குறித்து ஆன்-போர்டு கணினிகளில் இருந்து தரவை புலனாய்வாளர்கள் பெற முடியும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com