90 வயது தாத்தாவை திருமணம் செய்த இளம் பெண்

90 வயது தாத்தாவை இளம் பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் சமுக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார்.
90 வயது தாத்தாவை திருமணம் செய்த இளம் பெண்
Published on

கானா நாட்டைச் சேர்ந்த இளம் பெண்ணான அஸ்லோம் ஜியோனிஸ்ட் 90 வயது முதியவர் ஒருவரை திருமணம் செய்துள்ளார். மாநில அளவிலான அழகி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ள அஸ்லோம் முதியவரை திருமணம் செய்து கொண்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கணவருடன் தான் இருக்கும் புகைப்படங்களை அஸ்லோம் சமுக வலைதளங்களில் தொடர்ந்து பதிவேற்றும் நிலையில் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார்.

ஆனால் அதை பற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லை. அஸ்லோம் கூறுகையில், நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். என்னை ஆசிர்வதித்த கடவுளுக்கு நன்றி, எங்கள் காதலுக்கு வயதில்லை. நம்மை உண்மையாக நேசிப்பவருடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com