பிரேசிலில் கொரோனா பாதிப்புக்கு 966 பேர் உயிரிழப்பு

பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் 33,933 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.
பிரேசிலில் கொரோனா பாதிப்புக்கு 966 பேர் உயிரிழப்பு
Published on

பிரேசிலியா,

அமெரிக்காவுக்கு அடுத்து உலக அளவில் அதிக கொரோனா பாதிப்பு உயிரிழப்புகளை கொண்ட நாடாக பிரேசில் உள்ளது. இதேபோன்று, அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு அடுத்து அதிக கொரோனா பாதிப்பு எண்ணிக்கைகளுடன் 3வது இடத்தில் உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 33,933 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. இதனால் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 3 லட்சத்து 19 ஆயிரம் ஆக உயர்ந்து உள்ளது. இதேபோன்று 966 பேர் உயிரிழந்து விட்டனர்.

இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 67 ஆயிரத்து 862 ஆக உயர்ந்து உள்ளது. சிகிச்சை முடிந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1.91 கோடியாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com