தாய்நாட்டை காக்க ரஷியாவுக்கு எதிராக போரிட முன்வந்த 98 வயது “பாட்டி”

98 வயதான உக்ரைன் பாட்டி ரஷியாவுக்கு எதிராகப் போரிட ராணுவத்தில் சேர முன்வந்துள்ளார்.
image courtesy: @MFA_Ukraine
image courtesy: @MFA_Ukraine
Published on

கீவ்,

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி 24ந்தேதி அந்நாடு மீது ரஷியா படையெடுத்தது.  உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை என ரஷிய அதிபர் புதின் கூறினார்.  உக்ரைனின் ராணுவ உட்கட்டமைப்பு மீதே தாக்குதல் நடைபெறுகிறது என ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.

உக்ரைன் மீது ரஷியா தொடுத்து வரும் போரானது தொடர்ந்து 24வது நாளாக நீடித்து வருகிறது.  இந்த போரில், குடிமக்களில் 600 பேர் வரை உயிரிழந்து உள்ளனர்.  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் என ஐ.நா. மனித உரிமைகளுக்கான தூதரகம் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், 98 வயதான உக்ரைன் பாட்டி ரஷியாவுக்கு எதிராகப் போரிட ராணுவத்தில் சேர முன்வந்துள்ளார்.

ஓல்ஹா ட்வெர்டோக்லிபோவா என்ற 98 வயதான பாட்டி ஒரு போர் வீரர் மற்றும் இரண்டாம் உலகப் போரில் தீவிரமாக பங்கேற்றார். ரஷிய அதிபர்  விளாடிமிர் புதின் உக்ரைன் மீது படையெடுப்பிற்கு உத்தரவிட்ட பிறகு, ஓல்ஹா தனது தாய்நாட்டைப் பாதுகாக்க இராணுவத்தில் சேர முன்வந்தார். துரதிர்ஷ்டவசமாக, அவரது வயது காரணமாக மறுக்கப்பட்டது.

இதுகுறித்து, உக்ரைன் வெளியுறவு அமைச்சகத்தின் டுவிட்டர் பக்கத்தில், இரண்டாம் உலகப் போரின் வீரரான ஓல்ஹா ட்வெர்டோக்லிபோவா(98 வயது) தனது வாழ்க்கையில் 2வது முறையாக போரை எதிர்கொண்டார். அவள் மீண்டும் தனது தாய்நாட்டைப் பாதுகாக்கத் தயாராக இருந்தாள், ஆனால் எல்லா தகுதிகளும் அனுபவமும் இருந்தபோதிலும், வயது காரணமாக மறுக்கப்பட்டது. அவர் விரைவில் கியேவில் மற்றொரு வெற்றியைக் கொண்டாடுவார் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என பதிவிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com