ரஷ்யாவில் தொழிற்சாலையில் வெடிவிபத்து; 38 பேர் காயம்

ரஷ்யாவில் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 38 பேர் காயம் அடைந்தனர்.
ரஷ்யாவில் தொழிற்சாலையில் வெடிவிபத்து; 38 பேர் காயம்
Published on

ரஷ்ய நாட்டின் மாஸ்கோ நகருக்கு கிழக்கே 400 கி.மீட்டர் தொலைவில் ஜெர்ஜின்ஸ்க் நகரில் தொழிற்சாலை ஒன்று அமைந்து உள்ளது. இந்த தொழிற்சாலையில் வெடிமருந்துகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்துள்ளன.

இந்த நிலையில், திடீரென தொழிற்சாலையில் வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது. இதனால் ஏற்பட்ட கரும்புகை அந்த இடம் முழுவதும் பரவி உள்ளது. இந்த வெடிவிபத்தில் 38 பேர் காயமடைந்து உள்ளனர். இதனை தொடர்ந்து தகவல் அறிந்து மீட்பு குழுவினர் அங்கு சென்றுள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com