

மொகாதிசு,
பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் இரவு வெடிகுண்டுகள் நிரப்பிய காரை ஓட்டி வந்து, இங்குள்ள ஒரு ஓட்டலுக்கு வெளியே நிறுத்தி வெடிக்க செய்தனர்.
வெடிகுண்டுகள் வெடித்து சிதறியதில், அந்த பகுதியே அதிர்ந்தது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மற்றும் சில கட்டிடங்கள் தீக்கிரையாகின. இதனால் அங்கு பெரும் பதற்றமும் பீதியும் தொற்றிக்கொண்டது. மக்கள் உயிரை காப்பாற்றி கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். எனினும் குண்டுவெடிப்பில் சிக்கி 35 பேர் உடல் சிதறி உயிர் இழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு அல்-கொய்தாவின் ஆதரவு பெற்ற அல் ஷபாப் பயங்கரவாதிகள் பொறுப்பு ஏற்றனர்.