பட்டத்தில் சிக்கி அந்தரத்தில் பறந்த குழந்தை: ஒரு திடுக்கிடவைக்கும் காட்சி

தைவானில் பட்டம் விடும் திருவிழாவின்போது பட்டத்தின் வாலில் சிக்கிய சிறுமி வானில் சுழற்றியடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று காண்போரை பதற அடித்தது.
பட்டத்தில் சிக்கி அந்தரத்தில் பறந்த குழந்தை: ஒரு திடுக்கிடவைக்கும் காட்சி
Published on

தைவான்

தைவானின் நான்லியோ கடற்கரையில், புகழ்பெற்ற பட்டம் விடும் திருவிழா நடைபெற்றது. திருவிழாவின்போது பட்டத்தின் வாலில் சிக்கிய சிறுமி வானில் சுழற்றியடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று காண்போரை பதற வைதத்து. ஒரு மூன்று வயது சிறுமி எப்படியோ பட்டம் ஒன்றின் வாலில் சிக்கியுள்ளாள்.பட்டம் பறக்க, பட்டத்தின் வால் மேலெழும்ப, சுமார் 100 அடி உயரத்திற்கு வீசியெறியப்பட்டாள் அந்த சிறுமி.

பயந்து அலறினாலும், அவள் அந்த பட்டத்தை விடவில்லை. சிறுமியை ஒரு சுழற்று சுழற்றி வீசியபின் பட்டத்தின் வால் தரையை நோக்கி வர, காத்திருந்த மக்கள் அவளைப் பிடித்துக்கொண்டனர். என்றாலும், சிறுமிக்கு சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டுள்ளதால் சிறுமி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.<இந்த அசம்பாவிதத்தைத் தொடர்ந்து பட்டம் விடும் திருவிழா உடனடியாக நிறுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com