கடலில் விழுந்த வாலிபர் ஜீன்ஸ் பேண்டை பயன்படுத்தி உயிர் தப்பினார்

கடலில் விழுந்த வாலிபர் ஒருவர் தமது ஜீன்ஸ் பேண்டையே மிதவையாகப் பயன்படுத்தி உயிர் தப்பிய காட்சிகள் வெளியாகியுள்ளன
கடலில் விழுந்த வாலிபர் ஜீன்ஸ் பேண்டை பயன்படுத்தி உயிர் தப்பினார்
Published on

தொலாகா பே,

நியூசிலாந்தில் தொலாகா பே என்ற கடற்பகுதியில் கரையில் இருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் படகு ஒன்றில் ஜெர்மனியைச் சேர்ந்த சகோதரர்கள் பயணித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக ஆர்னே முர்கே என்பவர் கடலில் விழுந்து விட அவரது சகோதரர் அதை கவனிக்கவில்லை. சற்று நேரத்தில் ஆர்னேவை காணவில்லை என்பதை அறிந்த ரோவே, நகராட்சி ஹெலிகாப்டர் மீட்பு சேவைக்கு தகவல் கொடுக்க, மூன்றரை மணி நேர தேடுதலுக்குப்பின் ஆர்னே முர்கே மீட்கப்பட்டார்.

ஆர்னே தமது ஜீன்ஸ் பேண்டையே மிதவையாகப் பயன்படுத்தி உயிர்வாழும் கலையை கற்றிருந்தார். எனவே, தமது ஜீன்ஸ் பேண்டில் காலின் நுனி பாகங்கள் இரண்டையும் முடிச்சுப்போட்டு அதில் நீர், காற்று ஆகியவற்றை நிரப்பி இடுப்பு பகுதி துணியை இறுக்கி மிதவையாக பயன்படுத்தி உயிர் தப்பினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com