வேகமாகப் பரவும் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ்- பிஏ.4.6 மாறுபாடு பற்றிய புதிய தகவல்..!!

அமெரிக்காவை தொடர்ந்து புதிய வகை பிஏ.4.6 துணை மாறுபாடு தற்போது இங்கிலாந்தில் பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

லண்டன்,

கடந்த 2 ஆண்டுகளாக உலகம் முழுவதும் கொரோனா தொற்று நோய்க்கு எதிராக உலக நாடுகள் போராடி வந்தது. தொற்று நோய் பரவல் முடிவுக்கு வரப்போகிறது என்று தோன்றும்போது, வைரஸின் புதிய மாறுபாடு வெளிப்பட்டு, கவலைகளை தொடரச் செய்கிறது.

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸின் ஒமைக்ரான் பிஏ.4.6 துணை மாறுபாடு அமெரிக்காவில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த புதிய வகை பிஏ.4.6 துணை மாறுபாடு தற்போது இங்கிலாந்தில் பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இங்கிலாந்து ஹெல்த் செக்யூரிட்டி ஏஜென்சி (UKHSA) கூறுகையில், இங்கிலாந்தில் தொற்று மாதிரிகளின் மொத்த பரிசோதனையில் பிஏ.4.6 மாறுபாடு 9% பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஏ.4.6 எப்படி உருவானது என்பது முழுமையாகத் தெரியவில்லை. ஆனால் பிஏ.4.6 ஒமைக்ரான் என்பது பிஏ.4 மாறுபாட்டின் வழித்தோன்றலாக கருதப்படுகிறது. இது பல வழிகளில் பிஏ.4 ஐப் போலவே இருக்கும்.

பிஏ.4 மாறுபாடு முதன்முதலில் ஜனவரி 2022 இல் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இந்த மாறுபாடு பிஏ.5 மாறுபாட்டுடன் சேர்ந்து உலகில் பல நாடுகளில் பரவியது.

இந்த பிஏ.4.6 மாறுபாடு வைரஸின் மேற்பரப்பில் உள்ள புரதத்திற்கு ஒரு பிறழ்வைக் கொண்டு செல்கிறது. இது நமது செல்களுக்குள் நுழைகிறது. இந்த ஆர்346டி பிறழ்வு தடுப்பூசியிலிருந்து பெறப்பட்ட ஆன்டிபாடிகளில் இருந்து வைரஸ் தப்பிக்க உதவுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com