செல்லப்பிராணி பிரியர்களிடையே புதிய ட்ரெண்ட்.. நிலா கேக்

நாய்களுக்கான நிலா கேக்குகளில் சர்க்கரை அல்லது உப்பு சேர்க்கப்படாமல், அவை எளிதில் ஜீரணிக்கக்கூடிய வகையில் தயாரிக்கப்படுகின்றன.
செல்லப்பிராணி பிரியர்களிடையே புதிய ட்ரெண்ட்.. நிலா கேக்.
நாய் நிலா கேக் சாப்பிடும் காட்சி
Published on: 

பெய்ஜிங்,

சீனாவின் வருடாந்திர மத்திய இலையுதிர் விழாவின் பிரதான இனிப்பு வகையான நிலா கேக்குகள், இப்போது மனிதர்களுக்கு மட்டுமானவை அல்ல. மனிதர்கள் அதிலிருந்து பின்வாங்கினாலும், நாய்கள் அதை விரும்பி உண்கின்றன. பூனைகளும் அவ்வாறே செய்கின்றன.

மத்திய-இலையுதிர் கால திருவிழா- நிலா கேக்

சீனாவின் பாரம்பரிய பண்டிகையான மத்திய-இலையுதிர் கால திருவிழாவை முன்னிட்டு, நாய்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட 'நிலா கேக்குகள்' அங்குள்ள செல்லப்பிராணி வளர்ப்பாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. சீன கலாச்சாரப்படி இந்த திருவிழாவின் போது மனிதர்கள் நிலா கேக் எனப்படும் பாரம்பரிய இனிப்பு பலகாரங்களை சாப்பிட்டு மகிழ்வது வழக்கம். தங்களின் செல்லப் பிராணிகளும் இந்த கொண்டாட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில், பிராணிகளுக்கான பிரத்யேக நிலா கேக்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஆரோக்கியமான முறையில் தயாரிப்பு

மனிதர்கள் சாப்பிடும் சாதாரண நிலா கேக்குகளில் அதிக சர்க்கரை மற்றும் எண்ணெய் கலந்திருப்பதால், அவை நாய்களின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கலாம். இதனால், நாய்களுக்கான நிலா கேக்குகளில் சர்க்கரை அல்லது உப்பு சேர்க்கப்படாமல், அவை எளிதில் ஜீரணிக்கக்கூடிய வகையில் தயாரிக்கப்படுகின்றன. இவை பொதுவாக கோழி இறைச்சி, வாத்து இறைச்சி, சால்மன் மீன் மற்றும் பூசணிக்காய் போன்ற ஆரோக்கியமான பொருட்களைக் கொண்டு, பிராணிகளுக்கான தீவன வடிவில் வடிவமைக்கப்படுகின்றன.

விற்பனை விவரம்

சீனாவில் உள்ள முன்னணி ஆன்லைன் தளங்கள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கான பிரத்யேக பேக்கரிகளில் இந்த நிலா கேக்குகள் விறுவிறுப்பாக விற்பனையாகி வருகின்றன. 4 கேக்குகள் கொண்ட ஒரு பாக்ஸ், தரத்திற்கு ஏற்ப 10 முதல் 50 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.120 முதல் ரூ.600 வரை) விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சீனாவில் செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் நிலையில், பிராணிகளுக்கான இந்த புதிய உணவு கலாச்சாரம் அங்கு பெரும் வர்த்தக வாய்ப்பாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com