

வாஷிங்டன்,
ஈரான்-அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் அமலில் இருக் கிறது. ஆனாலும் ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கடற்பகு தியை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளதாலும், ஹார்முஸ் நீரி ணையை ஈரான் மூடியுள்ளதாலும் வளைகுடாவில் போர் பதற்றம் முடிவுக்கு வரவில்லை.
அங்கே நிரந்தர அமைதியை ஏற்படுத்தும் வகையில் இரு நாடுகளும் நடத்திய முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இரு நாடுகளுக்கு இடையே மத்தியஸ்தம் செய்து வரும் பாகிஸ்தான். அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கைகளை எடுத்தபோதும், இந்த சந்திப்பு நடை பெறவில்லை.
எனினும் இருதரப்பும் மறைமுகமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளன. அதேநேரம் தங்கள் மீது மீண்டும் அமெரிக்கா தாக்குதலை தொடங்கினால் கடுமையான பதிலடி கொடுப்போம் என ஈரான் மிரட்டல் விடுத்து உள்ளது.
ஈரானின் புதிய முன்மொழிவில் எனக்கு திருப்தியில்லை. அடுத்து என்ன நடக்கிறது என பார்ப்போம்
ஈரான் தலைமை உடன்பாட்டுக்கு வர விரும்பினாலும் அவர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஈரான் உடனான போர் முடிவுக்கு வரும்போது சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிரடியாக குறையும். அணு ஆயுதம் இல்லாத ஈரானே, அமெரிக்காவின் இலக்கு.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.