மெக்சிகோவில் 6.5 ரிக்டரில் கடுமையான நிலநடுக்கம்: 2 பேர் பலி

நிலநடுக்கத்தால் நாட்டின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
மெக்சிகோவில் 6.5 ரிக்டரில் கடுமையான நிலநடுக்கம்: 2 பேர் பலி
Published on

மெக்சிகோ சிட்டி,

தெற்கு மற்றும் மத்திய மெக்சிகோவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவானதாக மெக்சிகோவின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் அகபுல்கோவிலிருந்து வடகிழக்கே சுமார் 57 மைல்கள் தொலைவில் 35 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதால் அச்சமடைந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும், சில இடங்களில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கம் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர். பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.   

X

Daily Thanthi
www.dailythanthi.com