ஐ.நா.வின் மனிதநேய உதவி தடைக்கு விலக்கு அளிக்கும் தீர்மானம்; புறக்கணித்த இந்தியா... ஏன்?

ஐ.நா.வின் மனிதநேய உதவிகளுக்கு தடை விதிப்பதற்கு விலக்கு அளிக்கும் தீர்மானத்திற்கு வாக்களிக்காமல், புறக்கணித்ததற்கு இந்தியா விளக்கம் அளித்து உள்ளது.
ஐ.நா.வின் மனிதநேய உதவி தடைக்கு விலக்கு அளிக்கும் தீர்மானம்; புறக்கணித்த இந்தியா... ஏன்?
Published on

ஐ.நா. சபை,

ஐ.நா.வில் 15 உறுப்பினர்கள் கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா மற்றும் அயர்லாந்து நாடுகள் வரைவு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தன. இதன்படி, மனிதநேயம் சார்ந்த உதவிகளுக்கான முயற்சிகளுக்கு தடை விதிப்பதில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் இந்த தீர்மானம் அமைந்து இருந்தது.

இந்த தீர்மானத்திற்கு 14 உறுப்பு நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. எதிராக ஒருவரும் வாக்களிக்கவில்லை. எனினும், தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்காமல் இந்தியா அதனை புறக்கணித்து உள்ளது. இதனால், பெரும்பான்மை பெற்ற நிலையில் வரைவு தீர்மானம் பயன்பாட்டிற்கு ஏற்று கொள்ளப்பட்டு உள்ளது.

இதுபற்றி இந்தியா சார்பில் விளக்கமும் அளிக்கப்பட்டது. இதுபற்றி ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதியான ருசிரா கம்போஜ் கூறும்போது, பயங்கரவாத குழுக்கள் இதுபோன்ற மனிதநேயம் சார்ந்த என்ற பெயரிலான வாய்ப்பினை தங்களுக்கு சாதகம் ஏற்படும் வகையில் பயன்படுத்தி கொண்ட, நிரூபிக்கப்பட்ட சான்றுகளின் அடிப்படையில் எங்களது இந்த முடிவு வெளிப்பட்டு உள்ளது.

எங்களுடைய அண்டை நாடுகளில், தடைகளில் இருந்து தப்பிக்க மனிதநேய அமைப்புகள் என தங்களை உருவகப்படுத்தி காட்டி கொண்ட பல்வேறு பயங்கரவாத குழுக்களின் சார்பில் நடந்த சம்பவங்களும் உள்ளன. இதனை சர்வதேச சமூகமும் ஒப்பு கொண்டுள்ளது.

இந்த பயங்கரவாத குழுக்கள், மனிதநேய உதவி என்ற பெயரை பயன்படுத்தி, அதன் நிழலின் கீழ் நிதி சேர்ப்பதிலும், போராளிகளை பணியமர்த்தும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றன என அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com