இறந்துவிட்டதாக கூறிய டாக்டர்.. பிணவறைக்கு கொண்டுசெல்லப்பட்ட குழந்தை.. அடுத்து நடந்த அதிசயம்..!

டாக்டரின் அஜாக்கிரதையால் நேர்ந்த இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இறந்துவிட்டதாக கூறிய டாக்டர்.. பிணவறைக்கு கொண்டுசெல்லப்பட்ட குழந்தை.. அடுத்து நடந்த அதிசயம்..!
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவின் பீனிக்ஸ் நகரில் உள்ள ஒரு வீட் டின் நீச்சல் குளத்தில் விழுந்து, 18 மாத குழந்தை ஒன்று மயங்கியது. உடனே மீட்கப்பட்ட அந்த குழந்தையை பரிசோதித்த டாக்டர் ஆரியன் தூசி, குழந்தை இறந்துவிட்டதாக அறிவித்தார். இதையடுத்து, குழந்தையின் உடல் ஆஸ்பத்திரியின் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சுமார் 5 மணி நேரத்திற்குப் பிறகு, அதிகாரிகள் முன்னிலையில் உடற்கூறாய்வு செய்ய வந்த டாக்டர்கள், அந்த குழந்தை மூச்சு விடுவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மற்றொரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த குழந்தை, தீவிர சிகிச்சைக்குப் பின் அதிசயமாக உயிர் பிழைத்தது. டாக்டரின் அஜாக்கிரதையால் நேர்ந்த இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பெற்றோர்

சிறுவன் உயிர் பிழைத்தநிலையில், அவனது பெற்றோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அலட்சியமாக செயல்பட்டதாக குழந்தையின் பெற்றோர் மீது கில்பர்ட் போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். வீட்டில் கஞ்சா வாசனை கடுமையாக இருந்ததாகவும், நீச்சல் குளத்திற்கு மேற்பார்வையின்றி செல்ல வழிவகுக்கும் வகையில் கதவுகள் திறந்திருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com