ஜப்பானில் 26 பேருடன் சென்ற சுற்றுலா படகு மாயம்..!!

ஜப்பானில் 26 பேருடன் சென்ற சுற்றுலா படகை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

டோக்கியோ,

ஜப்பானின் வடக்கு பகுதியில் ஹோகைடோ தீவில் உள்ள ஒரு துறைமுகத்தில் இருந்து காசு 1 என்கிற படகு சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. படகில் 2 சிறுவர்கள் உள்பட 24 சுற்றுலா பயணிகளும், 2 ஊழியர்களும் இருந்தனர். இந்த படகு நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது படகு ஆபத்தில் இருப்பதாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. அதன் பின்னர் படகு கட்டுப்பாடு அறையுடனான தொடர்பை இழந்தது.

இதையடுத்து ஜப்பான் கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் மூலம் மாயமான படகை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

எனினும் படகு இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதில் பயணம் செய்த 26 பேரின் கதி என்ன? என்பது தெரியவில்லை. படகை தேடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com