

லாஸ் ஏஞ்சல்ஸ்,
அமெரிக்காவில் ரியல் எஸ்டேட் தொழில் அதிபராக திகழ்ந்தவர் ராபர்ட் டர்ஸ்ட். இவர் தனது நெருங்கிய தோழி சூசன் பெர்மானை 2000-ம் ஆண்டில் கொலை செய்து விட்டார்.
தனது மனைவி கேத்லீன் மாயமானது தொடர்பாக போலீசிடம் எதுவும் கூறிவிடக்கூடாது என்பதற்காக ராபர்ட் டர்ஸ்ட், தனது தோழி சூசனை கொலை செய்துள்ளார். இது தொடர்பான வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். தண்டனை விவரம் அடுத்த மாதம் 18-ந் தேதி அறிவிக்கப்படும்.