திரையரங்கில் சிரித்த பெண்ணிற்கு நேர்ந்த விபரீதம்..

படத்தின் சில காட்சிகளின்போது அவர்கள் தங்களை மறந்து மகிழ்ச்சியில் சத்தமாகச் சிரித்தனர்.
சத்தமாக சிரித்த பெண்ணை பீட்சா தட்டால் வாலிபர் தாக்கினார்.
திரையரங்கில் சிரித்த பெண்கள்
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவில் திரையரங்கில் சத்தமாகச் சிரித்த பெண் மீது இளைஞர் ஒருவர் பீட்சா தட்டால் பலமாக அடித்தார்.

அமெரிக்கா நாட்டில் ஒரு பெண் தனது தோழிகளுடன் சேர்ந்து திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்தார். படத்தின் சில காட்சிகளின்போது அவர்கள் தங்களை மறந்து மகிழ்ச்சியில் சத்தமாகச் சிரித்தனர். அதனால் அருகில் இருந்த இளைஞர் ஒருவருக்குக் கடுமையான எரிச்சல் ஏற்பட்டது.

பீட்சா தட்டால் தாக்குதல்

இதையடுத்து ஆத்திரமடைந்த அந்த இளைஞர், திடீரென இருக்கையை விட்டு எழுந்து அந்தப் பெண்ணை நோக்கிக் கத்தினார். பின்னர், தான் கையில் வைத்திருந்த கனமான பீட்சா தட்டைக் கொண்டு அப்பெண்ணின் கன்னத்தில் பலமாகத் தாக்கினார். அந்த தாக்குதலின் வேகம் தாங்காமல் அந்தப் பெண் நிலைகுலைந்தார்.

பரபரப்பு வீடியோ

பெண்ணைத் தாக்கிவிட்டு, அந்த இளைஞர் எந்தவித பதற்றமும் இன்றி மீண்டும் தனது இருக்கைக்குச் சென்று அமைதியாகப் படம் பார்க்கத் தொடங்கினார். இந்த சம்பவம் முழுவதையும் அந்த பெண்ணின் தோழிகள் தங்களது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்தனர்.

தற்போது இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், உள்ளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் நடந்த இந்த வன்முறை சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிப் பரவி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com