ஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற இளைஞர் தலீபான்கள் சுட்டதில் பலி

ஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற 20 வயது இளைஞர் ஒருவர் தலீபான்கள் சுட்டதில் உயிரிழந்து உள்ளார்.
ஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற இளைஞர் தலீபான்கள் சுட்டதில் பலி
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகரில் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு தனது உறவினருடன் பைசல் என்ற 20 வயது இளைஞர் சென்றுள்ளார். இதன்பின்பு அவர்கள் இருவரும் திரும்பி கொண்டிருந்து உள்ளனர்.

அவர்களை சோதனை சாவடி ஒன்றில் மறித்த தலீபான்கள் சோதனை செய்துள்ளனர். இதன்பின்பு, அவர்களை போகும்படி கூறியுள்ளனர். இந்நிலையில், தலீபான்கள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் பைசல் உயிரிழந்து உள்ளார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com