அல்ஜீரியாவில் ராணுவ விமானம் விபத்து: ராணுவ வீரர்கள் 100 பேர் பலி?

அல்ஜீரியாவில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த ராணுவ வீரர்கள் 100 பேர் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன.
அல்ஜீரியாவில் ராணுவ விமானம் விபத்து: ராணுவ வீரர்கள் 100 பேர் பலி?
Published on

அல்ஜெர்ஸ்,

அல்ஜீரியாவின் பவுஃபாரிக் நகரில் உள்ள ராணுவ தளம் அருகே அந்நாட்டு ராணுவ விமானம் விபத்துக்குள்ளானது. தென்மேற்கு நகரமான பெச்சார் நகர் நோக்கி சென்று கொண்டிருந்த விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 100 ராணுவ வீரர்கள் பலியாகியதாவும் உள்ளூர் தொலைக்காட்சிகளில் செய்தி வெளியாகின. விபத்து நடைபெற்ற பவுஃபாரிக் நகரம் வடக்கு மத்திய தரைக்கடல் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.

இந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை இன்னும் உறுதியாக வெளியாகவில்லை. விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றியும், அதில் பயணம் செய்தவர்கள் பற்றியும் குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com