

வாஷிங்டன்,
பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, நடிகர் பிராட் பிட்டை காதலித்து மணந்தார்.
இந்த தம்பதியரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் 2016-ம் ஆண்டு பிரிந்து விட்டனர். அவர்களின் 6 குழந்தைகளை யார் வளர்ப்பது என்பதில் சிக்கல் நிலவி வருகிறது.
இந்த நிலையில் ஏஞ்சலினா ஜோலியும், பிராட் பிட்டும் பிரிந்த பின்னர், இப்போது முதல் முறையாக அமெரிக்காவில் ஒன்றாக தோன்றி உள்ளனர். அவர்கள் ஒரே வாரத்தில் பல முறை சந்தித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
அவர்களை பிரபலங்களை துரத்தி படம் பிடிக்கும் புகைப்படக்காரர்கள் நைசாக படம் பிடித்து விட்டனர். அந்தப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.