ஆப்கானிஸ்தான்: 1 வருடத்திற்கு பின் மீண்டும் திறக்கப்படும் திரையரங்குகள்

அங்கு வெளியாக உள்ள 37 திரைப்படங்களிலும் சேர்த்தே ஒரு பெண் கலைஞர் மட்டுமே நடித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான்: 1 வருடத்திற்கு பின் மீண்டும் திறக்கப்படும் திரையரங்குகள்
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கடந்த ஓர் ஆண்டாக ஆட்சி செய்து வருகின்றனர். அவர்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்த நாள் முதல் பெண்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

குறிப்பாக பெண்கள் மேல்நிலை கல்வி கற்பதற்கு தலீபான்கள் தடைவிதித்தது சர்வேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆப்கானிஸ்தான் மக்கள் தலீபான்களின் கொடுமையால் பாதிக்கப்பட்டு வாழ்கின்றனர் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் சமீபத்தில் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் திரையரங்குகள் திறக்கப்படவுள்ளன. இதனால் திரைப்பட நடிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும் இதிலும் பெண் கலைஞர்களுக்கான இடம் கடுமையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

அங்கு 37 படங்கள் வெளியாவதற்கு தயார் நிலையில் உள்ளது. இருப்பினும் இந்த அனைத்து திரைப்படங்களிலும் சேர்த்தே அதிபா முகமதி என்ற ஒரு பெண் நடிகர் மட்டுமே நடித்துள்ளார். இதனால் அங்கு பெண்கள் திரைப்படங்களில் நடிப்பதற்கு தடைகளின்றி அனுமதி தர வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com