ஆப்கானிஸ்தானில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட இந்தியர் டெல்லி திரும்பினார்

ஆப்கானிஸ்தானில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட இந்தியர் பன்ஸ்ரீலால் அரிண்டா விடுவிக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு விமானம் மூலம் டெல்லி வந்து சேர்ந்தார்.
ஆப்கானிஸ்தானில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட இந்தியர் டெல்லி திரும்பினார்
Published on

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மருந்து கடை நடத்தி வந்தவர் பன்ஸ்ரீலால் அரிண்டா (வயது 50). இந்தியரான இவர் கடந்த மாதம் 14-ந்தேதி வழக்கம் போல் தனது கடைக்கு சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கி முனையில் மிரட்டி அவரை கடத்தி சென்றனர்.

டெல்லியில் வசித்து வரும் பன்ஸ்ரீலால் அரிண்டாவின் குடும்பத்தினரின் கோரிக்கையின் பேரில், அவரை மீட்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.

அதனை தொடர்ந்து கடத்தப்பட்ட 2 வாரங்களுக்கு பின்னர் கடந்த மாதம் 29-ந்தேதி பன்ஸ்ரீலால் அரிண்டா விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர் இந்திய அதிகாரிகளின் பாதுகாப்பில் இருந்து வந்த பன்ஸ்ரீலால் அரிண்டா நேற்று முன்தினம் இரவு விமானம் மூலம் டெல்லி வந்து சேர்ந்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com