ஆப்கானிஸ்தான் படையினர் தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 14 பேர் பலி

ஆப்கானிஸ்தான் படையினர் தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 14 பேர் பலியாயினர்.
ஆப்கானிஸ்தான் படையினர் தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 14 பேர் பலி
Published on

கஜினி,

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை உள்நாட்டுப்படைகள் தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் அங்கு கஜினி மாகாணம், தேஹ்யாக் மாவட்டத்தில் உள்ள சுலைமான்ஜாய் கிராமத்தில் தலீபான் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பது அறிந்து அங்கு உள்நாட்டுப் படைகள் நேற்று முன்தினம் அதிரடி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் 14 தலீபான் பயங்கரவாதிகள் பலியாகினர். இதை கஜினி மாகாண செய்தி தொடர்பாளர் ஆரிப் நூரி தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து மேலும் 15 தலீபான் பயங்கரவாதிகளை உள்நாட்டுப் படையினர் கைது செய்தனர். அவர்கள் விசாரணைக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com