

காபூல்,
ஆப்கானிஸ்தானில் உள்ள பக்லான் மாகாணத்தின் வடக்கு பகுதியில், ஆப்கான் ராணுவம் நடத்திய தாக்குதலில் தலீபான் அமைப்பைச் சேர்ந்த 12 பயங்கரவாதிகள் பலியாகினர்.
மேலும் தலீபான் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த 16 கிராமங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவை தற்போது ஆப்கான் ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
கடந்த 16 ஆம் தேதியில் இருந்து, பக்லான் மாகாணத்தில் தலீபான் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ஆப்கான் ராணுவம் ஈடுபட்டு வருகிறது. இந்த தாக்குதல் நடவடிக்கையின் போது தலீபான் மூத்த தளபதி காரி பக்த்யார் உள்பட 24 பயங்கரவாதிகள் காயமடைந்துள்ளதாக ராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தலீபான் அமைப்பின் செய்தி தொடர்பாளர் சபீபுல்லா முஜாஹித், இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளார். ஆப்கான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.