ஆப்கானிஸ்தான்: வான்வழி தாக்குதலில் 35 கிளர்ச்சியாளர்கள் பலி

ஆப்கானிஸ்தானில், ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 35 கிளர்ச்சியாளர்கள் பலியாயினர்.
ஆப்கானிஸ்தான்: வான்வழி தாக்குதலில் 35 கிளர்ச்சியாளர்கள் பலி
Published on

காஸ்னி,

ஆப்கானிஸ்தானின் கிழக்கு காஸ்னி மாகாணத்தில் தலிபான் பயங்கரவாதிகளை குறிவைத்து ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் இன்று வான்வழியாக தாக்குதல் நடத்தினர்.

காஸ்னி மாகாணத்தில் உள்ள அண்டார், கெரோ, டீயக் மற்றும் குராபாக் மாவட்டங்களில் தலிபான்கள் மறைவிடங்களில் இந்த வானவழி தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் அந்த பகுதிகளில் இருந்த 35 கிளர்ச்சியாளர்கள் பலியாகினர். மேலும் 17 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


X

logo
Daily Thanthi
www.dailythanthi.com