ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு

ஆப்கானிஸ்தானில் மத வழிபாட்டு கூட்டத்தில் இன்று நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், பலி எண்ணிக்கை தற்போது 50 ஆக உயர்ந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் முகமது நபியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தினை குறிக்கும் வகையில், திருமண மகால் ஒன்றில் இன்று மதகுருக்கள் தலைமையில் மீலாது நபி விழா கூட்டம் நடந்தது.

அப்போது அங்கு திடீரென குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 40 பேர் கொல்லப்பட்டதாகவும் , 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியானது.

இதுகுறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி நஜீப் டேனிஷ் கூறும்பொழுது, முதற்கட்ட தகவலின்படி இது தற்கொலை தாக்குதல் என தெரிய வந்துள்ளது. பலி மற்றும் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 50ஐ கடந்து இருக்கும் என கூறினார்.

இந்நிலையில் மத வழிபாட்டு கூட்டத்தில் நடந்த இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், தற்போது பலி எண்ணிக்கை தற்போது 50 ஆக உயர்ந்துள்ளது. மேலும் காயமடைந்தவர்களுக்கு தீவீர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்ற்கு தற்போது வரை எந்தவொரு தீவிரவாத குழுக்களும் போறுப்பேற்கவில்லை. இந்த சம்பவம் குறித்து தீவீர விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com