ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதலில் 14 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. #Afghanistan
ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதலில் 14 பேர் உயிரிழப்பு
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் விளையாட்டு மைதானத்திற்கு வெளியே கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இத்தாக்குதலில் 14 பேர் உயிரிழந்து உள்ளனர் எனவும் 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர் எனவும் முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலுக்கு எந்தஒரு பயங்கரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆப்கானிஸ்தான் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இத்தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com