ஆப்கானிஸ்தான்: 2 வாரங்களில் 5-வது முறையாக நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் கடந்த பிப்ரவரி 18-ந்தேதியில் இருந்து ஒரு வாரத்திற்குள் 4 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளன.
ஆப்கானிஸ்தான்: 2 வாரங்களில் 5-வது முறையாக நிலநடுக்கம்
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தானில் இன்று மதியம் 2.31 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. இந்நிலநடுக்கம் 140 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

கடந்த பிப்ரவரி 23-ந்தேதி ஆப்கானிஸ்தானில் 4.6 என்ற ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கம் 120 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. கடந்த பிப்ரவரி 22-ந்தேதி ஆப்கானிஸ்தானில் ரிக்டர் அளவுகோலில் 4.2 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கம் 150 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இதேபோன்று, பிப்ரவரி 18-ந்தேதி ரிக்டர் அளவுகோலில் 4.6 மற்றும் 4.3 என்ற அளவிலான இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இது முறையே 10 கி.மீ. மற்றும் 180 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால், ஆப்கானிஸ்தானில் கடந்த 2 வாரங்களில் 5-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com