போர் பதற்றத்தை தணிக்க ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை

போர் பதற்றத்தைத் தணிக்க, இரு நாட்டு உயர் அதிகாரிகளும் சீனாவில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
போர் பதற்றத்தை தணிக்க ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை
Published on

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் நீண்டகாலமாக பயங்கரவாத ஊடுருவல் மற்றும் மோதல்கள் நீடித்து வருகின்றன. குறிப்பாக, டி.டி.பி. எனப்படும் தலீபான் ஆதரவு அமைப்பினர் பாகிஸ்தான் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வந்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க பாகிஸ்தான் ராணுவம் எதிர் தாக்குதலைத் தொடங்கியது.

இந்த அதிரடி வேட்டையில் இதுவரை 800 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 1,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த தாகவும் அந்நாட்டு பாதுகாப்புத் துறை மந்திரி அட்டாவுல்லா தரார் தெரிவித்துள்ளார். மேலும், பயங்கரவாதிகளின் 286 முகாம் கள் மற்றும் 249 போர் டேங்கர்கள், நவீன ஆயுதங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன.

தற்போது நிலவும் இந்த போர் பதற்றத்தைத் தணிக்க, இரு நாட்டு உயர் அதிகாரிகளும் சீனாவில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பயங்கரவாதிகள் மீது ஆப்கானிஸ்தான் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தான் திட்ட வட்டமாகத் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com