ஆப்கானிஸ்தான் சாலையில் கண்ணிவெடிகளை புதைத்தபோது வெடித்தது; 4 பயங்கரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தான் பதக்‌ஷான் மாகாணத்தில் தலீபான் பயங்கரவாதிகள் கண்ணிவெடிகளை புதைத்தபோது அது வெடித்ததில் 4 பயங்கரவாதிகள் பலியாகினர்.
ஆப்கானிஸ்தான் சாலையில் கண்ணிவெடிகளை புதைத்தபோது வெடித்தது; 4 பயங்கரவாதிகள் பலி
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்ட உள்நாட்டுப்படைகளும், அமெரிக்க கூட்டுப்படைகளும் போராடி வருகின்றன.

ஆனாலும் தலீபான் பயங்கரவாதிகள் இன்னும் அங்கு நாசவேலைகள் நடத்துவதை நிறுத்தவில்லை.

இந்தநிலையில் அங்குள்ள பதக்ஷான் மாகாணம், வார்தோஜ் மாவட்டத்தில் டிர்காரன் என்ற இடத்தில் உள்ள சாலையில் நேற்று தலீபான் பயங்கரவாதிகள் கண்ணிவெடிகளை புதைத்துக்கொண்டிருந்தனர்.

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில், கண்ணிவெடிகள் உரிய நேரத்துக்கு முன்பாகவே வெடிக்கத்தொடங்கின. இதில் 4 பயங்கரவாதிகள் சிக்கி உடல் சிதறி உயிரிழந்தனர்.

2 பயங்கரவாதிகள் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று சுற்றி வளைத்தனர்.

அங்குள்ள சாலையில் வேறு எங்கும் கண்ணி வெடிகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளனவா என வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் அங்குலம் அங்குலமாக தேடினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com