காபூலில் இரட்டை வெடிகுண்டு தாக்குதல்; பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஷாஸ்தாரக் பகுதியில் அடுத்தடுத்து இரண்டு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்து உள்ளது.
காபூலில் இரட்டை வெடிகுண்டு தாக்குதல்; பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு
Published on

காபூல்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஷாஸ்தாரக் பகுதியில் இரட்டை வெடிகுண்டு தாக்குதல் நடை பெற்றது. இதில் பலியானோர் என்ணிக்கை 21 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் 27 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலில் 3 நிருபர்கள், ஒரு போட்டோகிராபர் உள்ளிட்டோரும் பலியாகி உள்ளனர். பத்திரிக்கையாளர்களை குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. பைக்கில் வந்த ஒருவன் குண்டுகளை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்திய சில நிமிடங்களிலேயே அடுத்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com