கசோக்கி கொலையை அடுத்து சவுதியில் மற்றொரு பத்திரிகையாளரும் கொடுமைப்படுத்தி கொலை?

கசோக்கி கொலையை அடுத்து சவுதி அரேபியாவில் மற்றொரு பத்திரிகையாளரும் கொடுமைப்படுத்தி கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கசோக்கி கொலையை அடுத்து சவுதியில் மற்றொரு பத்திரிகையாளரும் கொடுமைப்படுத்தி கொலை?
Published on

ரியாத்,

சவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்தவர் அந்த நாட்டின் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (59). சமீபத்தில் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த 2-ம் தேதி சென்ற அவர் மாயமானார்.

அவர் அந்த தூதரகத்துக்குள் வைத்து சவுதி அரேபிய ஏஜெண்டுகளால் கொல்லப்பட்டு விட்டார் என்று பல தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை இதுவரை சவுதி அரேபியா மறுத்து வந்தது.

பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி சவுதி அரேபியாவால் கொலை செய்யப்பட்டிருந்தால், அந்த நாட்டின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரித்தார்.

இது ஒரு சர்வதேச கண்டனத்தை ஏற்படுத்தியதுடன் மேற்கு நாடுகளுடனான உறவுகளுக்கு சவுதி அரேபியாவுக்கு நெருக்கடி அளித்து உள்ளது. இந்த விவகார முடிவதற்கு முன் மற்றொரு விவகாரமும் சவுதி அரேபியாவுக்கு எதிராக எழுந்து உள்ளது.

காவலில் வைக்கப்பட்டு இருந்த பத்திரிகையாளர் துருக்கியின் அப்துல் அஜீஸ் அல்-ஜசீர் கொடுமைப்படுத்தி கொல்லபட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. அல்-ஜசீர் சமூக வலைதளத்தில் சவுதி அரச குடும்பத்தின் உயர்மட்ட உறுப்பினர்களால் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தி வந்ததாக மத்திய கிழக்கு கண்காணிப்பகம் அரபு ஊடகங்கள் மேற்கோளிட்டு தெரிவித்துள்ளது.

அல்-ஜசர் கடந்த மார்ச் மாதம் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டார். மார்ச் மாதம் சவுதி அரேபியாவால் அல்-ஜசீர் வலுக்கட்டாயமாக கைது செய்யபட்டார். மனித உரிமை ஆர்வலர் யஹ்யா அஸிரி நியூ அரப் மீடியாவிடம் தெரிவித்து உள்ளார்.

அஸிரி, அல்குஸ்ட் (ALQST) மனித உரிமைகள் அமைப்பின் நிறுவனர் ஆவார். இவர் இங்கிலாந்தில் வசித்து வருகிறார். அங்கு அரசியல் தஞ்சம் பெற்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com