தென்கொரியாவில் மூன்று மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறப்பு - மாணவர்கள் முககவசம் அணிவது கட்டாயம்

தென்கொரியாவில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்படுத்தப்பட்டதை அடுத்து அங்குள்ள கல்லூரிகள் திறக்கப்பட்டன.
தென்கொரியாவில் மூன்று மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறப்பு - மாணவர்கள் முககவசம் அணிவது கட்டாயம்
Published on

சியோல்,

சீனாவில் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. உகானில் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளும் ஏற்பட்டது. சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவை தொடர்ந்து இந்த வைரஸ் தென்கொரியாவிலும் வேகமுடன் பரவியது. தென்கொரியாவில் தற்போது வரை 11,110 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்றும் 263 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து தென்கொரியாவில் கொரோனா நோய்த் தொற்று படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தென்கொரியாவில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மூன்று மாதங்களாக கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது கொரோனா நோய்த் தொற்று கட்டுப்படுத்தப்பட்டதை அடுத்து அங்குள்ள கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

கல்லூரிகளுக்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டன. மேலும் மாணவர்கள் முக கவசம் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com