'நடுவானில் எரிபொருள் கசிவு' ஏர் இந்தியா விமானம் ஸ்வீடனில் அவசர அவசரமாக தரையிறக்கம்

அமெரிக்காவில் இருந்து 311 பேருடன் ஏர் இந்தியா விமானம் டெல்லி நோக்கி வந்துகொண்டிருந்தது.
'நடுவானில் எரிபொருள் கசிவு' ஏர் இந்தியா விமானம் ஸ்வீடனில் அவசர அவசரமாக தரையிறக்கம்
Published on

ஸ்டாக்லோம்,

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் இருந்து 292 பயணிகள் உள்பட 311 பேருடன் ஏர் இந்தியா விமானம் இன்று டெல்லி நோக்கி வந்துகொண்டிருந்தது.

ஸ்வீடன் வான்பரப்பில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் ஒரு எஞ்சினில் இருந்து எரிபொருள் கசிந்தது. நடுவானில் எஞ்சினில் இருந்து எரிபொருள் கசிவதை கவனித்த விமானிகள் உடனடியாக விமானத்தை ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்லோம் விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கினர்.

விமானம் தரையிறக்கப்பட்டதையடுத்து எஞ்சினில் எரிபொருள் கசிவு சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. பயணிகளை டெல்லிக்கு அனுப்பும் பணிகளும் நடைபெற்று வருகிறது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com