நேபாளத்தில் 22 பேருடன் சென்ற விமானம் புறப்பட்ட 7 நிமிடத்திற்குள் அவசரமாக தரையிறக்கம்!

இன்று காலை 8 மணிக்கு புறப்பட்ட விமானம் 8.06 மணிக்கு தரையிறங்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
நேபாளத்தில் 22 பேருடன் சென்ற விமானம் புறப்பட்ட 7 நிமிடத்திற்குள் அவசரமாக தரையிறக்கம்!
Published on

காத்மாண்டு,

நேபாளத்தில் மலைப் பிரதேசமான முஸ்டாங்கிற்குச் சென்று கொண்டிருந்த பயணிகள் விமானம் ஒன்று பொக்ரா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

நேபாளத்தில் தனியார் விமான சேவை வழங்கும் சம்மிட் ஏர் விமான நிறுவனத்தின் இந்த விமானம், இன்று காலை 8 மணியளவில் புறப்பட்ட 7 நிமிடத்திற்குள் (8.06 மணிக்கு) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.

22 பேருடன் சென்ற விமானம் எஞ்சினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பொக்ரா விமான நிலையத்திற்கு திரும்பியது.ஒரே இன்ஜின் உதவியுடன் விமானம் தரையிறங்கியது.விமானத்தில் 18 பயணிகளும் நான்கு பணியாளர்களும் இருந்தனர்.இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேற்கு நேபாளத்தில் உள்ள முஸ்டாங் உலகின் மிக ஆழமான பள்ளத்தாக்கு ஆகும். இப்பகுதி தவுலகிரி மற்றும் அன்னபூர்ணா மலைகளுக்கு இடையே செங்குத்தாக உள்ள வறண்ட நிலப்பரப்பாகும்.

முன்னதாக மே மாதம் தாரா ஏர் பயணிகள் விமானம் மலைப்பாங்கான பகுதியில் விழுந்து நொறுங்கியது. வடமேற்கு நேபாளத்தில் 13 நேபாளிகள், 4 இந்தியர்கள் மற்றும் 2 ஜெர்மன் சுற்றுலாப் பயணிகள், 3 பணியாளர்களுடன் புறப்பட்ட விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த அனைவரும் பலியாகினர். இந்த நிலையில் இன்று பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com