

வாஷிங்டன் டி.சி.
அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலத்தில் உள்ள ரியோ கிராண்டே பகுதியில் ஏபிக்யூ உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இந்த உயிரியல் பூங்கவில் மீன்கள் காட்சியகம், தாவரவியல் பூங்கா மற்றும் ஏரி ஆகியவற்றை உள்ளது. இங்கு வனவிலங்குகள், கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் தாவரங்களை பற்றி தெரிந்து கொள்ள ஒரு சிறந்த இடமாகும்.
இங்கு யானைகளுக்கென்ற தனி பகுதி உள்ளது. இதில் யானைகள் சுதந்திரமாக நடமாடவும், குளிக்கவும் வசதியான புற்கள் மற்றும் மணல் பரப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் உள்ள 52 வயது ஆசிய பெண் யானை ஆலிஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 மணியளவில் வேலியின் ஒரு பகுதியை உடைத்துக்கொண்டு வெளியேறியது.
சுமார் 10 நிமிடங்கள் பூங்காவின் நடைபாதையில் சுதந்திரமாக உலா வந்த ஆலிஸ், அங்குள்ள செடி கொடிகளை சாப்பிட்டு கொண்டிருந்தது. இந்த காட்சியை கண்ட பூங்கா ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அங்கு வந்த ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு, தங்களின் பயிற்சி மூலம் ஆலிஸை மீண்டும் அதன் இருப்பிடத்திற்கு அழைத்து வந்தனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக பூங்கா 30 நிமிடம் தாமதமாக திறக்கப்பட்டது மேலும் உடைந்த வேலிகள் சரி செய்யப்பட்டதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்தது.