அல்ஜீரியா: பொதுத் தேர்வுக்காக இண்டெர்நெட் சேவை துண்டிப்பு

அல்ஜீரியாவில் பொதுத் தேர்வுக்காக நாடு முழுவதும் இண்டெர்நெட் சேவை துண்டிக்கப்பட்டது. #Algeria
அல்ஜீரியா: பொதுத் தேர்வுக்காக இண்டெர்நெட் சேவை துண்டிப்பு
Published on

அல்ஜீரியா,

அல்ஜீரியாவில், உயர் நிலை பள்ளிகளுக்கான டிப்ளமோ தேர்வில் மாணவர்கள் இணையம் மூலம் முறைகேடுகள் செய்வதை தடுப்பதற்காக நாடு முழுவதும் இண்டெர்நெட் சேவை தடைசெய்யப்பட்டது.

2,000 மையங்களில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் டிப்ளமோ தேர்வை எழுதினர். தேர்வு நேரம் முடியும் வரை தேர்வு எழுதும் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடாமல் இருக்க இணைய சேவை தடை செய்யப்பட்டது.

முன்னதாக 2016-ம் ஆண்டு நடந்த தேர்வில் அதிக மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டனர். தேர்வு தொடங்கும் முன்னரே, கேள்வித் தாள் சமூக வலைத்தளங்களில் வெளியானது.

இதன் அடிப்படையில், டிப்ளோமா தேர்வில் முறைகேடுகள் நடைப்பெறாமல் தடுப்பதற்காக இரண்டு மணி நேர இணைய சேவையை துண்டிக்க அரசு உத்தரவிட்டுள்ளதால், நாடு முழுவதும் இணைய சேவை தடை செய்வதாக அல்ஜீரிய டெலிகாம் நிறுவனம் அறிவித்திருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com