அல்ஜீரியா நாட்டின் முன்னாள் அதிபர் மரணம்

அல்ஜீரியா நாட்டின் முன்னாள் அதிபர் வயது முதிர்வு காரணமாக மரணமடைந்தார்.
அல்ஜீரியா நாட்டின் முன்னாள் அதிபர் மரணம்
Published on

அல்ஜியர்ஸ்,

அல்ஜீரியா நாடு வட அமெரிக்காவில் அமைந்துள்ளது. இந்நாட்டின் அதிபராக 1999 ஆம் ஆண்டு அப்டெலிஸ் ஃபொடிப்லிகா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன்பின்னர் நடைபெற்ற அனைத்து தேர்தலிலும் அப்டெலிஸ் ஃபொடிப்லிகா வெற்றிபெற்று தொடர்ந்து அதிபராக பதவி வகித்து வந்தார்.

இதற்கிடையில், அல்ஜீரிய அதிபர் பதவியில் இருந்து அப்டெலிஸ் ஃபொடிப்லிகா விலக வேண்டும் என்று அந்நாட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு அந்நாட்டு மக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து அப்டெலிஸ் அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், 84 வயதான அல்ஜீரிய முன்னாள் அதிபர் அப்டெலிஸ் ஃபொடிப்லிகா வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் நேற்று மரணமடைந்தார். இந்த தகவலை அல்ஜீரிய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com