ஈரானில் அலி லரிஜானி, சுலைமானிக்கு இறுதி சடங்குகள்

ஈரான் வெளியுறவு துறை மந்திரி அப்பாஸ் அராக்சி, நாட்டின் அரசியல் கட்டமைப்பு தொடர்ந்து மிக உறுதியாக உள்ளது என்று கூறினார்.
அலி லரிஜானி
அலி லரிஜானி
Published on

தெஹ்ரான்

அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து, கடந்த மாத இறுதியில் ஈரானில் வான்வழியாக தாக்குதல் நடத்தியது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈரானில் பலியானார்கள். இந்த தாக்குதல்களுக்கு ஈரானும், பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் அவற்றின் படை தளங்கள் அமைந்த பகுதிகளை தாக்கி வருகின்றன.

இந்நிலையில், 2 வாரங்களுக்கு மேலாக நடந்து வரும் மோதலில், ஈரானின் முக்கிய அதிகாரிகள் பலியாகி உள்ளனர். ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே, புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் தாக்குதலின் தொடக்கத்தில் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர்.

Also Read
குஜராத்: பட்ஜெட் கூட்டத்தொடருக்கு இடையே சட்டசபைக்கு வெடிகுண்டு மிரட்டல்
அலி லரிஜானி

இந்த நிலையில், ஈரானின் முக்கிய பாதுகாப்பு அதிகாரியான அலி லரிஜானி நள்ளிரவில் நடத்தப்பட்ட தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார் என இஸ்ரேலின் பாதுகாப்பு மந்திரி நேற்று கூறினார். ஈரானின் மறைந்த உச்ச தலைவர் காமேனி மற்றும் அவருடைய வாரிசான மொஜ்தபா காமேனி ஆகியோருக்கு நெருங்கிய கூட்டாளியாக செயல்பட்டவர் லரிஜானி.

இதேபோன்று, ஈரானின் இஸ்லாமிய புரட்சி காவல் படையின் பசிஜ் துணை ராணுவத்திற்கு தலைமையேற்று, மூத்த ராணுவ தளபதியாக செயல்பட்டு வந்தவர் குலாம்ரெசா சுலைமானி. தலைமையகத்தில் இருக்கும்போது எளிதில், கண்டறிந்து தாக்குதல் நடத்தி விட கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக அவர் கூடாரத்தில் சென்று தங்கியுள்ளார்.

ஆனால் கூடாரத்தில் தங்கியிருந்தபோது, தாக்கி வீழ்த்தப்பட்டார். இதனை இஸ்ரேல் பாதுகாப்பு படை நேற்று தெரிவித்தது. அவருடைய துணை தளபதியான சையது கரிஷியும் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் தாக்குதலால், ஈரானில் அடுத்தடுத்து முக்கிய அதிகாரிகள் பலியான நிலையில், முக்கிய பாதுகாப்பு அதிகாரிகளான அலி லரிஜானி, சுலைமானி மற்றும் ஐ.ஆர்.ஐ.எஸ். தேனா என்ற ஈரானிய கப்பலில் இருந்த பணியாளர்கள் என அமெரிக்க-இஸ்ரேல் கூட்டு படையினரின் தாக்குதலில் பலியானோருக்கு தெஹ்ரான் நகரில், அந்நாட்டு அரசு இன்று இறுதி சடங்குகளை நடத்தின.

அப்போது லரிஜானி உயிரிழப்பை உறுதிப்படுத்திய ஈரான் வெளியுறவு துறை மந்திரி அப்பாஸ் அராக்சி, நாட்டின் அரசியல் கட்டமைப்பு தொடர்ந்து மிக உறுதியாக உள்ளது என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com