மூன்றாம் உலக போர் தொடங்கி 60 ஆண்டுகள் ஆகிவிட்டது : அமெரிக்க இராணுவ அதிகாரி அதிர்ச்சி தகவல்

மார்ச் 24,1967 ஆம் ஆண்டே வேற்றுகிரகவாசிகள் இங்கு வந்து அணு ஆயுத அமைப்புகளில் மாற்றம் செய்து அதனை முடக்கிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
மூன்றாம் உலக போர் தொடங்கி 60 ஆண்டுகள் ஆகிவிட்டது : அமெரிக்க இராணுவ அதிகாரி அதிர்ச்சி தகவல்
Published on

அமெரிக்கா

வேற்றுகிரகவாசிகளால் 60 ஆண்டுகளுக்கு முன்பே மூன்றாம் உலக போர் தொடங்கிவிட்டது என அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

ராபர்ட் சலாஸ், அமெரிக்காவின் மூத்த ராணுவ அதிகாரி ஆவார். இவர் அங்கு விமானப்படையின் உயர்பதவியில் பணியாற்றியிருக்கிறார்.இவர் அணு ஆயுதங்களை வேற்றுகிரகவாசிகள் திருடிச் சென்றதை தான் பார்த்ததாக தெரிவித்துள்ளார். இது மட்டுமல்லாமல், அமெரிக்க விமானப்படையை சேர்ந்த தலைவர்கள் நான்கு பேர் இது குறித்த ஆவணங்களை வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

மார்ச் 24,1967 ஆம் ஆண்டே வேற்றுகிரகவாசிகள் இங்கு வந்து அணு ஆயுத அமைப்புகளில் மாற்றம் செய்து அதனை முடக்கிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

ராபர்ட் சலாஸ் அமெரிக்க விமானப்படையில் ஆயுத கட்டுப்பாட்டாளராக பணியாற்றியிருக்கிறார்.மேலும், அவர் கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய ஏவுகணை பிரிவுக்கான கமாண்டராகவும் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com