15 நாட்களாக தாய்லாந்து குகைக்குள் சிறுவர்கள் உயிருடன் இருந்தது எப்படி? பரபரப்பு தகவல்கள்

15 நாட்களாக தாய்லாந்து குகைக்குள் சிறுவர்கள் உயிருடன் இருந்தது எப்படி? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
15 நாட்களாக தாய்லாந்து குகைக்குள் சிறுவர்கள் உயிருடன் இருந்தது எப்படி? பரபரப்பு தகவல்கள்
Published on

சியாங்ராய்,

தாய்லாந்து தாம் லுவாங் குகைக்கு கடந்த மாதம் 23ந் தேதி சென்ற 12 சிறுவர்களும், அவர்களது கால்பந்து பயிற்சியாளரும் அங்கு பெய்த திடீர் மழை வெள்ளத்தில் சிக்கினர். அவர்கள் கதி என்ன ஆனது என தெரியாமல் அவர்கள் குடும்பங்கள் கலங்கி தவித்தன. இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளின் உதவியுடன் அவர்களை தேடும் வேட்டை நடந்தது. அவர்கள் உயிரோடு இருப்பதே கடந்த 2ந் தேதி இரவுதான் தெரிய வந்தது. இதையடுத்து, மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. இதன் பலனாக கடந்த 8ந் தேதி 4 சிறுவர்களும், நேற்று 4 சிறுவர்களும் மீட்கப்பட்டனர்.

எஞ்சிய 4 சிறுவர்களையும், அவர்களது கால்பந்து பயிற்சியாளரையும் இன்று மீட்ட மீட்புக்குழுவினர், குகைக்கு சீல் வைத்தனர். மீட்கப்பட்ட அனைவரும் உடல் அளவிலும் மனதளவிலும் ஆரோக்கியமாக செய்திகள் வெளியாகியுள்ளன. குகையில் சிக்கிய அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு இருப்பது அவர்களது குடும்பங்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தாய்லாந்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

உயிர்வாழ உதவியது என்ன?

குகைக்குள் 12 சிறுவர்களும், துணைப்பயிற்சியாளர் எகாபோலும் சிக்கிக்கொண்டபோது, அவர்களிடம் ஓரிரு நாட்களுக்குத் தேவையான உணவுகள் மட்டுமே கைவசம் இருந்துள்ளது. ஆனால், எந்தவிதமான உணவுகள் இன்றியும், சுத்தமான குடிநீர் இன்றியும், 15 நாட்களுக்கும் மேலாக வாழ்வது என்பது மிக மிகக் கடினமாகும். ஆனால், இந்தச் சிறுவர்கள் உயிருக்கு எந்தவிதமான ஆபத்தும் நேராமல் பாதுகாத்தது அந்த துணைப்பயிற்சியாளர் எகாபோலையேச் சாரும் என்கிறார்கள்.

சிறுவர்களுடன் மிகவும் ஆபத்தான குகைக்குள் சிக்கிக்கொண்டோம், அதோடு மழையும் சேர்ந்து பெய்கிறது என்பதை அறிந்தவுடன் துணைப்பயிற்சியாளர் எகாபோல் உஷாரானார்.தங்களிடம் இருக்கும் உணவுகளைச் சிறுவர்களுக்கு கொடுத்து அவர்களைச் சோர்வடையாமல் எகாபோல் பார்த்துக்கொண்டார். ஆனால், உணவு தீர்ந்தவுடன், தியானத்தின் மூலம் உடலில் சக்தியை எப்படிச் சேமிப்பது என்பதை சிறுவர்களுக்கு கற்றுக் கொடுக்கத் தொடங்கினார்.

காற்றும், சூரிய ஒளியும் அதிகமாக உள்ளே புகமுடியாத இடத்தில் இருந்ததால், மூச்சுவிடுவதிலும் சிறுவர்களுக்கு சிரமம் இருந்தது. ஆனால், இவை அனைத்தையும் தான் கற்றுக்கொண்ட தியானம், மூச்சுப்பயிற்சிக் கலை மூலம் சிறுவர்களுக்கும் கற்றுக்கொடுத்து அவர்களைப் பாதுகாத்தார்.

தியானம், மூச்சுப்பயிற்சி ஆகியவற்றின் மூலம் மனதை ஒருமுகப்படுத்தி, சிறுவர்களை பெரும்பகுதிநேரம் அமரவைத்து அவர்களின் சக்தியை செலவழிக்காமல், சோர்வடையாமல் துணைப்பயிற்சியாளர் பாதுகாத்தார். இதனால், சிறுவர்கள் சோர்வடையாமல் 15 நாட்களுக்கு மேலாக உயிர்வாழ முடிந்தது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com