ஜெருசலேம் புனித தலத்தில் பொருத்தப்பட்ட பாதுகாப்பு கருவிகள் நீக்கப்பட்டன

ஜெருசலேம் புனித தலத்தில் தீவிரவாத தாக்குதலுக்கு பின் பொருத்தப்பட்ட அனைத்து பாதுகாப்பு கருவிகளும் நீக்கப்பட்டன என இஸ்ரேலிய போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஜெருசலேம் புனித தலத்தில் பொருத்தப்பட்ட பாதுகாப்பு கருவிகள் நீக்கப்பட்டன
Published on

இந்நிலையில், கடந்த ஜூலை 14ந்தேதி ஜெருசலேமில் ஹரம் அல்-ஷரீப் என்ற மதவளாகத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 போலீசார் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து புனித தலம் என்ற அந்தஸ்து கொண்ட இந்த வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மெட்டல் டிடெக்டர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு கருவிகள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முஸ்லிம் மக்கள் தெருக்களிலேயே ஒரு வாரம் வரை தொழுகை நடத்தியுள்ளனர். தீவிரவாதிகள் ஆயுதங்களை கடத்தி கொண்டு புனித தலத்திற்குள் சென்று பதுக்கி வைத்துள்ளனர். அங்கிருந்து கொண்டு போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் மெட்டல் டிடெக்டர்கள் உள்ளிட்டவற்றை பொருத்த வேண்டிய தேவை உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனை ஏற்று கொள்ள முஸ்லிம் மக்கள் மறுத்து விட்டனர். இதனை அடுத்து ஏற்பட்ட மோதல்களில் 5 பாலஸ்தீனியர்கள் பலியாகினர்.

இதனால் ஆத்திரமடைந்த பாலஸ்தீனியர் ஒருவர் கடந்த வாரம் யூதர் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்த 4 பேரை கத்தியால் குத்தியுள்ளார். இதில் இஸ்ரேலியர்கள் 3 பேர் பலியானார்கள்.

இந்த நிலையில், ஹரம் அல்-ஷரீப் வளாகத்தில் இருந்து பாதுகாப்பு கருவிகளை போலீசார் நீக்கியுள்ளனர். இதனால் அந்த பகுதியை சுற்றிலும் உள்ள தெருக்களில் பாலஸ்தீனியர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com