

புதுடெல்லி,
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்துள்ளதுடன், தலீபான் பயங்கரவாதிகள் வசம் ஆட்சி அதிகாரம் சென்றுள்ளது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து பொருட்கள் இறக்குமதியாவதில் இடையூறு ஏற்பட்டு உள்ளது. இதனால், அங்கிருந்து வரக்கூடிய பாதாம் மற்றும் பிஸ்தா உள்ளிட்ட பொருட்களின் விலை இரட்டிப்படைந்து உள்ளது.
இதுபற்றி வர்த்தகர் ஒருவர் கூறும்போது, ஆப்கானிஸ்தானில் இருந்து வரக்கூடிய பாதாம் பருப்புகளின் விலை அதிகரித்து உள்ளது. இதுவரை ரூ.500 முதல் ரூ.600 என விற்பனை செய்யப்பட்டு வந்த இவற்றின் விலை ரூ.1,000 வரை உயர்ந்துள்ளது.
இதேபோன்று பிஸ்தா மற்றும் அத்தி பழம் ஆகியவற்றின் விலையும் அதிகரித்து உள்ளது. அந்நாட்டில் இருந்து வரத்து நிறுத்தப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.